ஜி20 கூட்டுத் தீர்மானம் மாநாட்டின் முதல் நாளிலேயே எப்படி சாத்தியமானது?
இந்தியாவின் கூட்டுத் தீர்மானத்தை உன்னிப்பாகப் படித்தால், யுக்ரேன் போர் பற்றிய அணுகுமுறை வலுவானதாக இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
டெல்லியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை ரஷ்யாவை யுக்ரேன் போர் குறித்து நேரடியாக விமர்சிக்கவில்லை. மாறாக, “உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பாக யுக்ரேனில் போரால் ஏற்பட்டுள்ள துன்பங்கள் மற்றும் எதிர்மறையான தாக்கங்களைப் பற்றி” மட்டும் பேசுகிறது.
அதோடு, “அந்தச் சூழலைப் பற்றிய பல்வேறு கருத்துகளும் மதிப்பீடுகளும் இருந்தன,” என்றும் குறிப்பிடுகிறது. இந்த ஆண்டு கூட்டறிக்கை, நாடுகளுக்கு “அச்சுறுத்தல் அல்லது பிராந்திய கையகப்படுத்துதலை கோருவதற்கு பலத்தைப் பிரயோகிப்பதைத் தவிர்க்க” அழைப்பு விடுக்கிறது.
இது ரஷ்யாவை நோக்கியதாகக் கருதப்படுகிறது. ஆனால், நேரடியாக இல்லை. இதுகுறித்து பிபிசியிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கூட்டுத் தீர்மானத்தில் யுக்ரேன் போர் பற்றிய பகுதி இன்றைய கவலைகளுக்குப் பதிலளிக்கிறது என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



