வெறும் 50 செமீ அகலமே உடைய இதுதான் உலகின் மிக மெலிதான காரா?
வெறும் 50 செமீ அகலமே உடைய இதுதான் உலகின் மிக மெலிதான காரா?
இத்தாலியைச் சேர்ந்த ஆண்ட்ரியா மராஸி 1993 ஃபியட் பாண்டா காரை (1993 Fiat Panda) 50 செ.மீ அகலம் கொண்ட மாடலாக மறு உருவாக்கம் செய்திருக்கிறார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அந்தக் காரை ஓட்ட முடிகிறது.
ஆண்ட்ரியா மராஸி தனது சிறுவயது முதலே அவர் குடும்பம் நடத்தி வந்த ஸ்கிராப்யார்ட்-இல் (Scrapyard) தனது தந்தையுடன் பணியாற்றி உள்ளார். இந்த கார் ஸ்கிராப்-க்கு (மறுசுழற்சி) செல்ல இருந்தது. ஆனால், அதற்கு மறு உயிர் கொடுக்க ஆண்ட்ரியா மராஸி முடிவெடுத்தார். மிகக் குறுகிய கார் உருவாக்கியதற்கான உலக சாதனையைப் பெறுவதே ஆண்ட்ரியா மராஸியின் கனவாக உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



