காணொளி: 54 வயதில் 17வது குழந்தைக்கு தாயான ராஜஸ்தான் பெண்
காணொளி: 54 வயதில் 17வது குழந்தைக்கு தாயான ராஜஸ்தான் பெண்
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரேகா பாய் என்கிற பெண் சமீபத்தில் தனது 17வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இவரின் 5 குழந்தைகள் தொற்று நோய் பாதிப்பால் இறந்துள்ளன. குழந்தை பிறப்பு விகிதம் இங்கு அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
50 வயதுக்கு மேல் இவர் குழந்தை பெற்றுக் கொண்டதை மருத்துவர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். இது மிகவும் அரிதான நிகழ்வு என்றும் குறிப்பிடுகின்றனர். பிறப்பு விகிதம் அதிகமாக உள்ள இந்தப் பகுதியில் அதனைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வு அவசியம் என குழந்தை நல வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



