இஸ்ரேலில் இரான் நடத்திய தாக்குதல் - அதிர்ந்த அமெரிக்க தூதரக கிளை
இஸ்ரேலில் இரான் நடத்திய தாக்குதல் - அதிர்ந்த அமெரிக்க தூதரக கிளை
இஸ்ரேல் இரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், திங்கட்கிழமை இரான் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலின் அதிர்வுகளால் டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் கிளை அலுவலகத்தில் சேதம் ஏற்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய இடம் இந்த அமெரிக்க தூதரக அலுவலகத்தின் அருகே இருந்துள்ளது. தாக்குதல் அதிர்வால் அலுவலகத்தில் இந்த சேதம் ஏற்பட்டதாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில், அமெரிக்க அதிகாரிகள் யாருக்கும் காயம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெருசலமில் உள்ள அமெரிக தூதரகம் மற்றும் துணைத்தூதரகம் இன்று மூடப்பட்டுள்ளது
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



