போதைப்பொருள் கடத்தல் கும்பலின் வதை முகாமா இது? அதிர வைத்த காட்சிகள்

காணொளிக் குறிப்பு,
போதைப்பொருள் கடத்தல் கும்பலின் வதை முகாமா இது? அதிர வைத்த காட்சிகள்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வதை முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது மெக்சிகோவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேற்கு மெக்சிகோ நகரமான குவாடலஜாராவில் ஒரு பண்ணையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பெயர் தெரியாதவர்கள் இந்த இடம்குறித்து தகவல் தெரிவித்ததாக குரேரோ புஸ்கேடோர் அமைப்பு கூறியது. பின்னர், இந்த தகவலை இந்த அமைப்பு காவல்துறைக்கு தெரிவித்தது. இங்கு நான்கு இடங்களில் ஆறு எலும்புக் குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

புனைப்பெயர்கள் கொண்ட புத்தகங்கள், தோட்டா உறைகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை குழுவினர் கண்டுபிடித்தனர்.

இந்த இடம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கான ஆட்சேர்ப்பு தளமாகயிருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு மனிதாபிமானமற்ற துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக ஒருவர் கூறுகிறார் இதற்கு முன்பு, செப்டம்பரில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும்போது காவல்துறையினர் இங்கு ஒரு உடலைக் கண்டனர். 10 பேர் கைது செய்யப்பட்டாலும் போதுமான விசாரணை நடத்தப்படவில்லை என்று அரசு ஒப்புக்கொள்கிறது.

இந்த இடம் பற்றிய கூடுதல் விவரங்கள் காணொளியில்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)