கோர வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் - மக்களின் நிலை என்ன?

காணொளிக் குறிப்பு, கோர வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் - மக்களின் நிலை என்ன?
கோர வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் - மக்களின் நிலை என்ன?

தன்சானியா, கென்யா, புருண்டி ஆகிய நாடுகளை மழை வெள்ளம் புரட்டிப்போட்டுள்ளது. தன்சானியாவில் மட்டும் மழை வெள்ள பாதிப்புகளால் குறைந்தது 155 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் வீடுகள், உடைமைகள் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டதால் இந்த நாடுகளில் மனிதாபிமான நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

எல் நினோ காலநிலை காரணமாக நிலைமை மோசமடைந்துள்ளதாக தன்சானியா பிரதமர் காசிம் மஜலிவா நாடாளுமன்றத்தில் கூறினார். 51,000 வீடுகள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதாகக் கூறிய அவர், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மேடான பகுதிகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தினார்.

கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக நாட்டின் பல இடங்கள் மோசமாக பாதிக்கபப்ட்டிருப்பதாகவும் தான்சானியா பிரதமர் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)