இரான் மீது வான்வழித் தாக்குதல் இஸ்ரேல் - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு,
இரான் மீது வான்வழித் தாக்குதல் இஸ்ரேல் - என்ன நடந்தது?

அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இஸ்ரேல் மீது 200 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது இரான். இதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் இரான் மீது அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலை அக்டோபர் 26ம் தேதி காலை நிறுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளது இஸ்ரேலின் ராணுவப்படை.

தெஹ்ரேனில் நடைபெற்ற இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழுமையான தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. இத்தகைய சூழலில் இரான் தலைநகரான தெஹ்ரானில் குண்டுவெடிப்புகளின் பலத்த சத்தம் கேட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

“இரானில் உள்ள ஆட்சி மற்றும் பிராந்தியத்தில் அதன் கூட்டாளி அமைப்புகள், 2023 அக்டோபர் 7ஆம் தேதி முதல் இடைவிடாமல் இஸ்ரேலை தாக்குவதால், உலகிலுள்ள மற்ற எந்த சுதந்திரமான, சுயாட்சியுள்ள நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் அதற்குப் பதிலடி கொடுக்கும் உரிமையும் கடமையும் இருப்பதாக” இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)