லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் சொன்ன குட்டிக்கதை என்ன? – வீடியோ

காணொளிக் குறிப்பு, லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் சொன்ன குட்டிக்கதை என்ன? - வீடியோ
லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் சொன்ன குட்டிக்கதை என்ன? – வீடியோ

லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய் என்ன பேச போகிறார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர் மேடையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அடுத்த சூப்பர்ஸ்டார் குறித்த சர்ச்சைக்கும் அவர் முடிவு கட்டியுள்ளார்.

சோஷியல் மீடியாவில் சமீப காலமாக தனது ரசிகர்கள் கோபப்படுவதைக் கண்டித்த அவர், "நமக்கு நிறைய பெரிய வேலைகள் இருக்கு, தேவையில்லாமல் சோஷியல் மீடியாவில் கோபப்பட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்," என்றும் கூறினார்.

அந்த விழாவில் அவர் மேலும் என்ன பேசினார்?

லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய்

பட மூலாதாரம், 7 Screen Studios

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)