பொம்மன் - பெள்ளியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

காணொளிக் குறிப்பு, தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மன் - பெள்ளியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
பொம்மன் - பெள்ளியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மன் - பெள்ளி தம்பதியை பிரதமர் மோடி சந்தித்தார்.

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்று யானைகளை பார்வையிட்டார். யானைகளுக்கு தடவிக்கொடுத்த பிரதமர் மோதி, அவற்றுக்கு உணவும் வழங்கினார்.

ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி யானைகளை நேரில் பார்வையிட்டதுடன் அந்த யானைகளுக்கும் பழங்கள் வழங்கினார்.

அதன் பின்னர், தாயில்லா குட்டி யானைகளை பராமரித்த தம்பதியும், ஆஸ்கர் விருதினை வென்ற ஆவணப்படத்தின் கருப்பொருளாக இடம் பிடித்தவர்களுமான பாகன் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி ஆகியோரை பிரதமர் மோடி நேரில் சந்தித்தார்.

அப்போது அவர்களை பாராட்டி, பரிசுகள் வழங்கி, சிறிது நேரம் கலந்துரையாடினார். பின்னர் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை மற்றும் புலிகள் பாதுகாப்பு குறித்து வனத்துறையினரிடம் கேட்டறிந்தார்.

பொம்மன் - பெள்ளியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

பட மூலாதாரம், TWITTER/NarendraModi

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: