இந்திய மக்கள் தொகை: எளிய வரைபடங்களில் 5 முக்கியத் தகவல்கள்

மக்கள் தொகை சீனாவை முந்தும் இந்தியா

இந்த ஆண்டின் மத்தியில் சீனாவை பின்னுக்கு தள்ளி உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சீனாவை முந்தினால், கிட்டத்தட்ட 142 கோடி மக்கள்தொகையுடன், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும். இது ஐரோப்பா (74 கோடி) மற்றும் அமெரிக்க (100 கோடியே 40 லட்சம்) கண்டத்தின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.

1960 மற்றும் 1980க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் மக்கள் தொகை வேகமாக வளர்ந்தது. மேலும் 70 ஆண்டுகளுக்குள், அதன் மக்கள் தொகையில் கூடுதலாக 100 கோடி பேர் இணைந்தனர். மக்கள்தொகை தற்போதும் அதிகரித்து வருகிறது, ஆனால் 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே வளர்ச்சி விகிதத்தில் இல்லை. இதனால், எதிர்காலத்தில் இந்தியாவின் மக்கள் தொகை குறையப் போகிறது என்று அர்த்தம் கொள்ளலாமா? இந்தியாவின் மக்கள்தொகை ஏற்றம் மற்றும் வரும் ஆண்டுகளில் என்ன நடக்கப் போகிறது என்பதை விளக்கும் ஐந்து விளக்கப்படங்கள் இங்கே உள்ளன.

குறுகிய காலத்தில் 100 கோடி மக்கள்

இந்தியாவின் தற்போதைய சரியான மக்கள் தொகை என்ன என்பது நம்மில் யாருக்கும் தெரியாது. எனெனில், 2011ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

அதேவேளையில், முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்புகளை ஒப்பிட்டு பார்க்கும்போது, 1950 முதல் 1980 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை வேகமாக உயர்ந்தது. அதாவது, 1951ல் 36 கோடியாக இருந்த மக்கள் தொகை 1981ல் 68 கோடியாக அதிகரித்தது. 30 அண்டுகளில் 30 கோடிக்கும் அதிகமானோர் இந்திய மக்கள் தொகையில் இணைந்தனர். ஐ.நா.வின் கருத்துப்படி, கடந்த 70 ஆண்டுகளில் 100 கோடிக்கும் அதிகமானோர் இந்திய மக்கள் தொகையில் இணைந்துள்ளனர்.

மக்கள் தொகை சீனாவை முந்தும் இந்தியா

ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக இந்திய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறையத் தொடங்கியுள்ளதால், மக்கள் தொகையில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. இந்திய மக்கள்தொகை அறிவியல் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் உதய சங்கர் மிஸ்ரா கருத்துப்படி, இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்துவிட்டது, ஆனால் அது தொடர்ந்து வளரும்.

சீனாவிலும் 140 கோடி மக்கள் உள்ளனர், ஆனால் பல ஆண்டுகளாக அதன் மக்கள்தொகை குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.

"தற்போதைய மக்கள்தொகை வேகத்தைக் கருத்தில் கொண்டு, மக்கள்தொகை வளர்ச்சி நிலையானதாக இருக்கும் நிலைத்தன்மையை அடைய குறைந்தது 40 ஆண்டுகளாவது நமக்கு ஆகும்" என்று டாக்டர் மிஸ்ரா கூறுகிறார்.

வேகமாக அதிகரித்து தற்போது குறைந்துவரும் மக்கள் தொகை

1950-1990 இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. நாட்டின் இறப்பு விதித்திற்கும் பிறப்பு விகிதத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம், நிகர இடம்பெயர்வு விகிதம் ஆகியவை கொண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கணக்கிடப்படுகிறது.

"இந்தியாவின் இறப்பு விகிதம் பல ஆண்டுகளாக குறைந்து வருகிறது. எனினும், சமீப ஆண்டுகளில் கருவுறுதல் குறைந்து வருவது, இந்தியாவின் விளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைவதற்கு மிகக் முக்கிய காரணியாக உள்ளது" என்றும் மிஸ்ரா குறிப்பிட்டார்.

மக்கள் தொகை சீனாவை முந்தும் இந்தியா

2021 இல், இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 0.68% ஆகக் குறைந்தது. இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது, அந்நாட்டின் மக்கள் தொகை 2017லும் 2 சதவீதத்திற்கு அதிகமாகவே இருந்தது. இதன் பொருள், இப்போது அதிகமான மக்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் மற்றும் குறைந்த குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள், வளர்ச்சி விகிதத்தை சரிவுக்கு கீழே தள்ளுகிறார்கள்.

தற்போதில் இருந்து 2050க்கு இடைப்பட்ட காலத்தில் மக்கள்தொகையில் ஒட்டுமொத்த அதிகரிப்பு என்பது அதிக கருவுறுதல் விகிதம் உடைய நாடுகளிலும் துணை-சஹாரா ஆப்பிரிக்க மற்றும் சில ஆசிய நாடுகள் உட்பட ஒட்டுமொத்த பெரிய மக்கள்தொகை கொண்ட நாடுகளிலும் ஏற்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம் இந்தியாவின் கருவுறுதல் விகிதம் கடந்த 20 ஆண்டுகளாக குறைந்து வருகிறது.

குறைந்துவரும் கருவுறுதல் விகிதம்

இந்தியாவில் உள்ள அனைத்து மதக் குழுக்களிடையேயும் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதாக தேசிய குடும்ப நல ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 80% உள்ள இந்துக்களில் பெண்களின் கருவுறுதல் என்பது 1.9 சதவித குழந்தைகள் பெற்றெடுத்தல் என்ற விகிதத்தில் உள்ளது. 1992 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், இது ஒரு பெண்ணுக்கு 3.3 குழந்தைகள் என்று இருந்தது. - 1992 மற்றும் 2019 க்கு இடையில் ஒரு பெண்ணுக்கு 1.4 குழந்தைகள் குறைந்துள்ளது.

இதேபோல், அதிக கருவுறுதல் விகிதத்டைக் கொண்ட இஸ்லாமிய மதத்திலும் 1992ஆம் ஆண்டை ஒப்பிடும்போது பெரிய வீழ்ச்சி தெரிகிறது. சமணர்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஆகியோரும் சமீப ஆண்டுகளில் குறைவான குழந்தைகளையே பெற்றுகொள்கின்றனர்.

மக்கள் தொகை சீனாவை முந்தும் இந்தியா

அதேநேரத்தில், இதன் காரணமாக இந்திய மக்கள் தொகை வரும் ஆண்டுகளில் திடீர் சரிவைக் காணும் என்று எண்ணத்தேவையில்லை.

"இளைய பெண்களிடையே கருவுறுதல் விகிதத்தில் சரிவைக் காண்கிறோம் என்றாலும், வயதான பெண்களுக்கு இன்னும் அதிக கருவுறுதல் விகிதம் உள்ளது, இது இந்தியாவின் மக்கள்தொகை வேகத்தை குறைந்தது இன்னும் 40 ஆண்டுகளுக்கு குறையாமல் பார்த்துக்கொள்ளும்", என்று டாக்டர் மிஸ்ரா கூறினார்.

ஐநாவின் கணிப்புப்படி, சமீபத்திய ஆண்டுகளில் காணப்படுவது போன்று கருவுறுதல் விகிதங்கள் காலப்போக்கில் படிப்படியாகக் குறைந்து கொண்டே இருந்தால், இந்தியாவின் மக்கள்தொகை 2100 இல் 150 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது இது ஒரு சிறிய அதிகரிப்புதான்.

மக்கள் குழந்தை பெற்றுகொள்ளாமல் இருப்பதை விரும்புவது போன்ற பல்வேறு சமூக - பொருளாதார காரணங்களையும் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது தொடர்பாக டாக்டர் மிஸ்ரா குறிப்பிட்டார்.

தற்போது, இந்தியாவின் கருவுறுதல் விகிதம் அமெரிக்கா (ஒரு பெண்ணுக்கு 1.6 குழந்தைகள்) மற்றும் சீனா (ஒரு பெண்ணுக்கு 1.2 குழந்தைகள்) ஆகியவற்றை விட சிறப்பாக உள்ளது, ஆனால்,1992 (ஒரு பெண்ணுக்கு 3.4 குழந்தைகள்) அல்லது 1950 (ஒரு பெண்ணுக்கு 5.9 குழந்தைகள்) என முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தற்போது இந்தியாவின் கருவுறுதல் விகிதம் மிகக் குறைவு.

மக்கள் தொகை சீனாவை முந்தும் இந்தியா

இளைய தலைமுறையின் நாடு

இளைய தலைமுறையினர் நிறைந்த நாடாக இந்தியா உள்ளது. அடுத்த 50 ஆண்டுகளுக்கும் இது தொடரும். இந்தியாவின் மக்கள் தொகையில் 40 சதவீதத்திற்கும் மேல் 25வயதுக்கும் குறைவானவர்கள். இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் 25 முதல் 64 வயதுக்கு உட்பட்டோராக இருந்தாலும் இந்தியர்களின் சராசரி வயது 28 ஆக உள்ளது.

மக்கள் தொகை சீனாவை முந்தும் இந்தியா

முதியோர்களின் எண்ணிக்கை எப்படி உள்ளது?

சீனா, அமெரிக்கா, ஐப்பான் போன்ற பிற நாடுகளைப் போல், இந்தியாவில் வயதானோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரவில்லை. சீனாவில் 10 நபர்களை எடுத்துக்கொண்டால் அதில் 1.4 நபர்கள் 65 வயதை கடந்தவராக உள்ளார். அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகம் அங்கு 10ல் 1.8 பேர் 65 வயதை கடந்தவராக உள்ளார்.

ஆனால், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 7 சதவீதம் பேர் மட்டுமே 65 வயதை கடந்தவர்களாக உள்ளனர். 2100ல் இந்த எண்ணிக்கை 23 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்தியாவின் மக்கள்தொகையில் 40% க்கும் அதிகமானோர் 25 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் ஐநாவின் கணிப்புகளின்படி, 2078 ஆம் ஆண்டில், இது 23.9% ஆக குறையும். அதற்கு இன்னும் 50 ஆண்டுகள் உள்ளன. ஆனால், 2063 வரை இந்தியாவில் வயதானோரின் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்றும், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இந்தியா இளைய தலைமுறையினர் நிறைந்த தேசமாகவே தொடரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: