தெலங்கானாவில் பா.ஜ.க.வுக்கு சிவாஜி கைகொடுப்பாரா? 'ரஸாக்கர்' டீசரால் என்ன சர்ச்சை?
ஐந்து மாநிலங்களில் மூன்றில், பாஜக காங்கிரஸுடன் நேரடிப் போட்டியில் உள்ளது. மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகள் போட்டியில் உள்ளன.
பல நிபுணர்களின் கூற்றுப்படி, வட இந்தியாவில் பாஜக தனது உச்சத்தை எட்டியுள்ளது, மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இடங்களை இழக்கும் சாத்தியத்தை ஈடுசெய்ய, தனது கோட்டைக்கு வெளியே தனது பிடியை வலுப்படுத்த வேண்டியது அவசியம்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வென்ற பிறகு, காங்கிரஸ் சாதிவாரி கணக்கெடுப்பு, பெண்கள், விவசாயிகள், முதியோருக்கு பயனளிக்கும் திட்டங்கள் என ஆறு உத்தரவாதங்களின் வாக்குறுதியுடன் வெற்றி பெற நம்பிக்கையுடன் இருக்கிறது.
வல்லுநர்களின் கூற்றுப்படி, பாஜக தலைவர்கள் தங்கள் பேச்சுகளால் இந்து வாக்குகளை ஒன்று சேர்க்க முயல்கின்றனர். ஆளும் பிஆர்எஸ் மற்றும் அசாதுதீன் ஒவைசியின் கட்சி ஆல் இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் ஆகியவை கூட்டாக இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
தேர்தலுக்கு முன்னதாக ராஸாகர் திரைப்படத்தின் டீசர் வெளியீடும் மற்றும் கடந்த ஆண்டு முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படும் பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கின் இடைநீக்கம் திரும்பப்பெறப்பட்டதும், தெலங்கானாவில் இந்துத்வாவை மேலும் முன்னெடுப்பதற்கான பாஜகவின் முயற்சிகளாக பார்க்கப்படுகின்றன.
இந்துக்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் சிவாஜி தொடர்பான வரலாற்றை தேர்தல் நன்மைகளுக்கு பயன்படுத்த முயற்சிப்பதாக பாஜக மீது அதன் எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



