காணொளி: 11 குழந்தைகளின் உயிரைப் பறித்த இருமல் மருந்து.. எப்போது ஆபத்தாகிறது?

காணொளிக் குறிப்பு, குழந்தைக்கு இருமல் மருந்து கொடுக்கும் போது என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது?
காணொளி: 11 குழந்தைகளின் உயிரைப் பறித்த இருமல் மருந்து.. எப்போது ஆபத்தாகிறது?

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்ததால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 11 குழந்தைகள் உயிரிழந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பெரும் பேசுபொருளாகி உள்ளது.

அந்த மருந்து தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசேன் பார்மாசூட்டிகல்ஸ் என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது என்றும், அந்த மருந்தில் ஆபத்தான டைஎத்திலின் கிளைக்கால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அரசுக்கு மத்திய பிரதேச அரசு கடிதம் எழுதியுள்ளது.

2 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த நிறுவனம் தயாரிக்கும் இருமல் மருந்தை குழந்தைகள் மட்டுமின்றி எந்த வயதினரும் பயன்படுத்த வேண்டாம் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

டை எத்திலின் கிளைக்கால் குழந்தைகளின் உயிருக்கு எவ்வாறு ஆபத்தானதாக மாறுகிறது? குழந்தைகளுக்கு இருமல் மருந்து வாங்கும் போது செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன? முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு