கேரளாவில் ஒரு குருவியை மீட்க நீதிமன்றம் வரை சென்ற மக்கள்
கேரளாவில் கடை ஒன்றிற்குள் சிக்கிய இந்த குருவியை மீட்க மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதி மற்றும் உயர்நீதிமன்றத்தின் அனுமதியும் கோரப்பட்டது. ஏன் தெரியுமா?
கண்ணூர் மாவட்டத்தில் உள்ள உளிக்கல் பஞ்சாயத்தில் உள்ள துணிக்கடை ஒன்று நீதிமன்ற உத்தரவால் ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்தது.
மூடப்பட்டிருந்த கடையின் முன்பு இருந்த கண்ணாடி கூண்டுக்குள் கடந்த செவ்வாய்கிழமை சிட்டுக்குருவி ஒன்று புகுந்தது.
ஆனால், அந்த கூண்டில் இருந்து குருவி வெளியே வர முடியாமல் தவித்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் இந்த குருவியை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர்.
நீதிமன்ற உத்தரவால் கடை மூடப்பட்டிருந்ததால் காவல்துறையோ தீயணைப்புத்துறையோ எதுவும் செய்ய முடியவில்லை.
பின்னர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி நிசார் அஹ்மது ஆகியோரின் முயற்சியின் மூலம் உயர்நீதிமன்றத்திடம் இருந்து அனுமதி பெற்று கடை திறக்கப்பட்டு மூன்று நாட்களாக சிக்கியிருந்த குருவி விடுவிக்கப்பட்டது.



