தாலிச் சங்கிலியை பறித்த நபரை துணிச்சலுடன் துரத்திப் பிடித்த பெண்
தாலிச் சங்கிலியை பறித்த நபரை துணிச்சலுடன் துரத்திப் பிடித்த பெண்
மகாராஷ்டிராவில் நாசிக்கில் தனது தாலியை பறித்த நபரை ஒரு பெண் துரத்தி பிடித்திருக்கிறார்.
காவல்துறையினர் கூற்றுப்படி, ஒருவர் முகவரி கேட்பது போல நடித்து பெண்ணின் கழுத்தில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க தாலியை பறித்திருக்கிறார். பின், துணிச்சலாக துரத்திச் சென்ற பெண் அந்த நபரை தாக்கினார். இதையடுத்து, அந்த நபர் இருசக்கர வாகனம் மற்றும் பையை அங்கேயே விட்டு தப்பி ஓடினார்.
பையில் இரண்டு தாலி இருந்ததாகவும், அவர் மீது 75 வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர். தற்போது அந்த நபரை தேடி வருவதாகவும் போலீஸ் கூறி உள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



