காணொளி : பிரான்ஸில் தனது வீட்டின் அருகே ஈபிள் டவர் மாதிரியை அமைத்த முதியவர்
காணொளி : பிரான்ஸில் தனது வீட்டின் அருகே ஈபிள் டவர் மாதிரியை அமைத்த முதியவர்
ஓய்வுபெற்ற உலோகத் தொழிலாளி ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் Eiffel Tower-ஐ அப்படியே பிரதியெடுத்தது போன்ற மாதிரியை அமைத்துள்ளார்.
ஜீன் கிளாட் ஃபாஸ்லர் எனும் அந்த நபர் Eiffel Tower-இல் பத்தில் ஒன்று என்ற அளவிலான பிரமிக்க வைக்கும் மாதிரியை வடிவமைத்து தனது ஆயுள் கால கனவை நிறைவேற்றியுள்ளார்.
Eiffel டவரை வடிவமைத்த கட்டடக் கலைஞர் குஸ்தாவ் ஐஃபெல்-இன் நீண்ட கால ரசிகர் இவர்.
77 வயதான அவர், இந்த மாதிரியை எட்டு ஆண்டுகளில் தனது பேரனுடன் செய்து முடித்துள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



