பறவைகளுக்காக ஆம்புலன்ஸ் - பேர்ட்மேனின் அற்புத உலகம்

காணொளிக் குறிப்பு, "Birdman" என அழைக்கப்படும் பிரின்ஸ் மேரா 2011ஆம் ஆண்டு முதல் பறவைகளுக்கான ஆம்புலன்ஸை இயக்கி வருகிறார்
பறவைகளுக்காக ஆம்புலன்ஸ் - பேர்ட்மேனின் அற்புத உலகம்

பிரின்ஸ் மேரா சண்டிகரின் கால்நடைத் துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். அதோடு, பறவைகளுக்காகவும் அவற்றைப் பாதுகாக்கவும் தனது சேவையை வழங்கி வருகிறார்.

மக்கள் என்னை "Birdman" என்றும் கூப்பிடுவார்கள். 2011ஆம் ஆண்டிலிருந்து பறவைகளுக்கான ஆம்புலன்ஸை இயக்கி வருகிறேன் என்கிறார் அவர்.

''இப்போது பறவைகள் என் குடும்பமாகிவிட்டன. ஒருமுறை ஒருவர் இறந்துபோன புறாவை குப்பைத் தொட்டியில் போடுவதை பார்த்தேன். அது சரி என எனக்கு தோன்றவில்லை. அந்தச் சிறிய உயிர்களுக்கு எந்தவொரு ஆம்புலன்ஸும் இல்லை. குறைந்தபட்சம், பறவைகளுக்கென ஆம்புலன்ஸ் இருப்பதாக நான் கேட்டதில்லை. அதனால்தான் காயமடைந்த பறவைகளுக்கு உதவத் தொடங்கினேன். அப்போது என்னிடம் ஒரு சைக்கிள் மட்டுமே இருந்தது. அதற்கு "Bird Ambulance" என பெயரிட்டேன்.'' என்கிறார் பிரின்ஸ் மேரா

தொடக்கத்தில், சைக்கிளையே ஆம்புலன்ஸாக மாற்றியிருந்தார். ஆனால் தற்போது, ஒரு e-bike மூலம் பறவைகளை காப்பாற்றி வருகிறார்.

மேலும் விவரங்கள் காணொளியில்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு