'சஞ்சார் சாத்தி' செயலி குறித்த சர்ச்சையின் முழு பின்னணி என்ன?

காணொளிக் குறிப்பு,
'சஞ்சார் சாத்தி' செயலி குறித்த சர்ச்சையின் முழு பின்னணி என்ன?

இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மார்ச் 2026 முதல் விற்கப்படும் புதிய செல்போன்களில் 'சஞ்சார் சாத்தி' செயலியை நிறுவ வேண்டும் என்று ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இந்தச் செயலியைச் செயலிழக்கச் செய்யவோ அல்லது அதில் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவோ முடியாதபடி இருப்பதை ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தொலைத்தொடர்புத்துறை கூறியுள்ளது.

"செல்போன்களில் பயன்படுத்தப்படும் ஐ.எம்.இ.ஐ-இன் (IMEI) நம்பகத்தன்மையைச் சரிபார்க்கவே" சஞ்சார் சாத்தி செயலி பயன்படுத்தப்படும் என்று அந்த வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.

முன்பே நிறுவப்பட்ட சாதனங்களில் உள்ள ஐ.எம்.இ.ஐ எண்ணை இந்தச் செயலி தானாகவே அணுகுமா அல்லது பயனர்கள் தாங்களே இந்த வன்பொருள் அடையாள எண்ணை (ஐ.எம்.இ.ஐ) உள்ளிட வேண்டுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், மோதி அரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளது. இது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறியுள்ள அந்த கட்சி, இந்த வழிகாட்டுதல்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

சஞ்சார் சாத்தி செயலி, முதன்முதலில் 2023-இல் ஒரு போர்ட்டலாகத் தொடங்கப்பட்டது. இது மோசடி அழைப்புகள் (Scam Calls) குறித்து புகாரளிக்கவும், பயனர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள சிம் கார்டுகளை அடையாளம் காணவும் மற்றும் செல்போன் திருடப்பட்டால் அதைச் செயலிழக்கச் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

இது இந்தியாவின் வணிக ரீதியான ஸ்பேம்களை தடுக்க பயன்படுத்தப்படுத்தப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) DND செயலியைப் போன்றது.

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு