ஐரோப்பாவில் கரைபுரண்டு ஓடும் ஆறுகள் , மிதக்கும் கிராமங்கள் - காலநிலை மாற்றம் காரணமா?
ஐரோப்பாவில் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஐரோப்பாவில் உள்ள ரோமானியாவில் பலத்த மழையும் வெள்ள பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. வெள்ளநீரில் அனைத்தையும் இழந்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
ரோமானியாவில் சனிக்கிழமை அன்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளின் போது 4 உடல்கள் மீட்கப்பட்டதாக அவசர சேவைகள் துறை, ஏ.எஃப்.பி. செய்தி முகைமையிடம் தெரிவித்துள்ளது. ஞாயிறு அன்று ஒருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்தார்.
அந்நாட்டின் கிழக்கு பகுதியில் பல்வேறு வீடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. கனமழை காரணமாக ஐரோப்பாவில் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள ஆறுகள் நிரம்பி வழிக்கின்றன.
இது குறித்து ஐரோப்பா நாடுகளின் அதிகாரிகள் கூறுவதென்ன? மீட்பு பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றது?
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



