‘எங்களின் ஆதரவை இழக்க நேரிடும்’- இஸ்ரேலை டிரம்ப் எச்சரித்தது ஏன்?
மேற்கு கரையை ஆக்கிரமிக்க முயன்றால் தங்களின் ஆதரவை இழக்க நேரிடும் என இஸ்ரேலை டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
காஸா போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கா முனைந்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைப்பது குறித்த வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டது.
மேற்கு கரையில் இஸ்ரேல் எதுவும் செய்யாது என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். இது காஸா போர் நிறுத்தத்திற்கு எதிராக உள்ளதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கூறினார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது பிரிவினையை உருவாக்க எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை எனக் குறிப்பிட்டார்.
சரி, இந்த விவகாரத்தில் நடந்தவை என்ன? இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு எப்படி உள்ளது?
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



