தோல்விப் படங்கள், மன்றங்கள் கலைப்பை தாண்டியும் அஜித்தை அவரது ரசிகர்கள் கொண்டாடுவது ஏன்?
தமிழ் சினிமா எத்தனையோ சூப்பர் ஸ்டார்களை கண்டிருக்கிறது. ஆனால், அவர்களிடம் இருந்து தனித்து இருப்பவர் நடிகர் அஜித். அப்படி அஜித் தனித்திருப்பதற்கு காரணம் அவரது ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் அஜித் அளவுக்கு தோல்வி படங்களை கொடுத்தவர் கிடையாது, ஆனாலும் அவரது ரசிகர்கள் அஜித்தை திரையில் பார்க்கும் போதெல்லாம் கொண்டாடித் தீர்க்கின்றனர்.
ரசிகர் மன்றம் வேண்டாம், அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம், தல என அழைக்க வேண்டாம் என அஜித் எடுத்த ஒவ்வொரு முடிவையும் பிற நடிகர்கள் எடுத்திருந்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என கூறுவது சிரமம்தான். ஆனால், அஜித்துக்கோ ரசிகர்கள் பட்டாளம் கூடிக்கொண்டே இருந்தது.
தற்போது அவரது குட் பேட் அக்லி 'ஒரு ஃபேன்பாய்' சம்பவமாக திரையில் வெளியாகி இருக்க அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அஜித், ரசிகர்கள் சந்திப்பை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தனது திரைப்படத்தின் ப்ரோமோஷன்களிலும் அவர் கலந்துகொள்வதில்லை. ஆனாலும் அவரை திரையில் பார்க்கும்போதெல்லாம் அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்.
அப்படி என்ன செய்துவிட்டார் அஜித்?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



