காணொளி: விபத்துக்குள்ளான விஜய் தேவரக்கொண்டா கார் - என்ன நடந்தது?
நடிகர் விஜய் தேவரக்கொண்டாவின் கார் விபத்துக்கு உள்ளானது.
அக்டோபர் 6 ஆம் தேதி அன்று தெலங்கானாவின் ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்தில் அவரது கார் ஒரு சிறிய விபத்தில் சிக்கியது.
இதில் கார் சேதமடைந்தாலும் தனக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என விஜய் தேவரக்கொண்டா தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் புட்டபர்த்தியில் இருந்து ஹைதராபாத் திரும்பும் போது, அவரது கார் விபத்துக்கு உள்ளானது.
பி.டி.ஐ செய்தி முகமையின்படி, இதற்கு பிறகு, தனது நண்பர் ஒருவரின் காரில் விஜய் தேவரக்கொண்டா ஏறி சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து விளக்கிய நடிகர் விஜய் தேவரக்கொண்டா, விபத்துக்கு பிறகு உடற்பயிற்சி செய்தபின் வீடு திரும்பியதாகவும், பிரியாணி சாப்பிட்டு தூங்கினால் எல்லாம் சரியாகி விடும் என்றும், இது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



