காணொளி: டிரம்பிடம் இந்தியா-பாகிஸ்தான் குறித்து மார்க் கார்னி பேசியது என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இந்தியா-பாகிஸ்தான் குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், “நீங்கள் சில மாதங்களுக்கு முன்பு என்னையும், உடன் வந்தவர்களையும் அன்புடன் வரவேற்றீர்கள். அப்போது நீங்கள் "மாற்றத்தை ஏற்படுத்தும் அதிபர்" என நான் கூறினேன்.
அதன் பிறகு, பொருளாதாரம், முன்னெப்போதும் இல்லாத வகையில், நேட்டோ நாடுகள் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க உறுதி, இந்தியா - பாகிஸ்தான் முதல் அசர்பைஜான் - ஆர்மீனியா வரை அமைதியை ஏற்படுத்தியது, இரானை செயலிழக்கச் செய்தது ஆகியவை நடந்துள்ளன. சொல்வதற்கு நேரம் குறைவாக உள்ளது, ஆனால் நான் குறிப்பிட்டது மிக முக்கியமானது.” என்றார்.
அப்போது, டிரம்ப், “கனடா மற்றும் அமெரிக்கா ஒன்றிணைவது.” என தெரிவித்தார்.
அப்போது பேசிய கார்னி, “இல்லை, நான் சொல்லப்போவது அது இல்லை.
அக்டோபர் 7-ல் நடந்த கொடூரமான தாக்குதல்களை நினைவுகூரும் இந்த சோக நாளில், பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் அமைதிக்கான வாய்ப்பை சாத்தியமாக்கி உள்ளீர்கள். கனடா இந்த முயற்சிகளை முழுமையாக ஆதரிக்கிறது. எங்களால் முடிந்ததை செய்ய தயாராக உள்ளோம்.” என கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



