மனிதர்கள் கிசுகிசு பேசிக் கொள்வதன் பின்னணி
உலகின் எங்கு மனிதர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் கிசுகிசு இருக்கும். ஆனால் நாம் ஏன் கிசுகிசு பேசுகிறோம் என்று யோசித்திருக்கிறோமா?
மனிதர்களின் வாழ்க்கையில் கிசுகிசு தவிர்க்க முடியாத அங்கமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பொதுவாவே கிசு கிசு பேசுவது என்றாலே ஒருத்தரைப் பற்றி தவறாக பேசுவது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது முழுவதும் உண்மை கிடையாது. கிசுகிசு பேசுவதற்கு அதையும் தாண்டிய அர்த்தம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
எந்த ஒரு கலாச்சாரத்திலும் மக்கள் வாழும் சூழல் சரியாக இருந்தால் மட்டுமே கிசு கிசு உருவாகும் என்று கூறுகிறார் வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை இணை பேராசிரியர் நிக்கோல் ஹெஸ்.
கிசுகிசு ஏன் பேசப்படுகிறது, அதன் பின்னணி என்ன? அது ஏற்படுத்தும் தாக்கம் என்ன போன்றவற்றை இந்தக் காணொளியில் முழுமையாக காணலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



