இந்திய பங்குச் சந்தையில் சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க டிரேடிங் நிறுவனம்

காணொளிக் குறிப்பு,
இந்திய பங்குச் சந்தையில் சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க டிரேடிங் நிறுவனம்

அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய டிரேடிங் நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட் (Jane Street), இந்தியாவின் பங்குச் சந்தையில் தற்போது ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஏமாற்று மற்றும் குழப்பத்திற்குரிய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கூறி இந்நிறுவனத்தை இந்தியச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி தடை செய்தது.

இந்தியப் பங்குச் சந்தையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான லாபத்தைச் சட்டவிரோதமாக ஈட்டியதாக ஜேன் ஸ்ட்ரீட் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணம், futures derivatives segment-ல் ஜேன் ஸ்ட்ரீட்டின் ஆக்ரோஷமான வர்த்தக உத்தியாகும்.

இந்நிறுவனம் லாபம் ஈட்டுவது மட்டுமல்லாமல் சந்தையிலும் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்துடன் பல வர்த்தகங்களைச் செய்தது. இந்த வர்த்தக உத்திகள் நியாயமானவை அல்ல என்றும் இவை விலையில் மாற்றங்களை ஏற்படுத்தி, பெரும் லாபம் ஈட்டும் வகையில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டவை என்றும் செபி கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு