காணொளி: பறவைகள் சாப்பிட வயலில் தனியே சிறுதானியம் பயிரிடும் 'பானை மாஸ்டர்'
காணொளி: பறவைகள் சாப்பிட வயலில் தனியே சிறுதானியம் பயிரிடும் 'பானை மாஸ்டர்'
பஞ்சாபில் பானை மாஸ்டர் என அழைக்கப்படும் இந்த பறவை மனிதன் யார்?
ஆசிரியரான லச்மன் சிங் சட்டா பறவைகள் மீது தீராப்பற்று கொண்டவர். இதனால் தனது கல்வி பணிகளுக்கு நடுவே சுற்றுச்சூழல் மற்றும் பறவை இனங்களுக்காகவும் வேலை செய்து வருகிறார்.
எந்த அளவிற்கு என்றால் தனியாக 65 சென்ட் நிலத்தில் பறவைகளுக்கு என்றே தனியாக சிறுதானியங்களை பயிரிட்டு வருகிறார். கிளிகள், மைனாக்கள் என பல வகையான பறவைகள் இங்கு வந்து சாப்பிட்டுச் செல்கின்றன.
இது மட்டுமல்லாது பறவைகள் இனப்பெருக்கம், அவைகளுக்கு நீரளிக்கவும் பானைகள் தயார் செய்து அவற்றை ஊர் முழுவதும் கொடுத்து வருகிறார்.
பறவைகளைப் போலவே தெருநாய்கள் மற்றும் பூனைகளுக்காகவும் வேலை செய்து வருகிறார் சட்டா.
செய்தியாளர்: சரன்ஜீவ் கௌஷல்
படத்தொகுப்பு: அல்தாஃப்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



