15 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட பாலியல் தொழிலாளியின் ஒளிப்படத்தை வைத்து தற்போது என்ன செய்கிறார்கள்?

காணொளிக் குறிப்பு,
15 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட பாலியல் தொழிலாளியின் ஒளிப்படத்தை வைத்து தற்போது என்ன செய்கிறார்கள்?

அந்தக் கொடூரமான சம்பவம் நடக்கும்போது, பெர்னாடேட் 'பெட்டி' ஸாபோவின் வயது வெறும் 19 தான்.

ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து மூன்று மாதங்கள் கூட முழுமையடையாத நிலையில், மீண்டும் பாலியல் தொழிலுக்கு வந்த அவர் ஒரு இரவில் கொடூரமான முறையில் அவரது அறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார்.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தக் கொலையில் இதுவரை ஒரு குற்றவாளி கூட கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போது நெதர்லாந்து காவல்துறையினருக்குப் பெரும் சவாலாக இருக்கும் இந்தக் கொலை வழக்கில் துப்பு துலக்க நவீன தொழில்நுட்பத்தை நாடியுள்ளது காவல்துறை.

ஆம்ஸ்டர்டாமில் பாலியல் தொழில் நடைபெறும் பகுதி ஒன்றில் ஸாபோவின் ‘ஹோலோகிராம்’ (முப்பரிமாண ஒளிப்படம்) நிழலாடுகிறது. இப்போது அதை வைத்து என்ன செய்கிறார்கள்?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)