உலக அழகிப் பட்டம் வென்ற ஒபால் சுஷாதா - யார் இவர்?
உலக அழகிப் போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒபால் சுஷாதா பட்டம் வென்றுள்ளார்.
108 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற உலக அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றானது மே 31ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த இறுதிச் சுற்றுக்கு நான்கு போட்டியாளர்கள் தகுதி பெற்றனர்.
இதில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒபால் சுஷாதா 2025ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார். சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக படித்து வரும் இவர், தூதராக பொறுப்பேற்க வேண்டும் என்று தன்னுடைய எதிர்காலத் திட்டம் பற்றி பேசியதாக மிஸ் வேர்ல்ட் இணைய தளம் கூறுகிறது.
மனநல ஆரோக்கியம் மற்றும் மானுடவியல் போன்ற துறைகளிலும் தனக்கு ஆர்வம் இருப்பதாக இவர் தெரிவித்துள்ளார். பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வையும் இவர் ஏற்படுத்தி வருகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



