காணொளி: தேஜஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கிய காட்சி

காணொளிக் குறிப்பு,
காணொளி: தேஜஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கிய காட்சி

துபையில் இன்று நடைபெற்ற விமானக் கண்காட்சியில் இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம் இன்று பிற்பகல் விபத்திற்குள்ளானது.

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:10 மணியளவில் பார்வையாளர்கள் முன்னிலையில் வான் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்கு உள்ளானதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை உறுதி செய்துள்ள இந்திய விமானப் படை, இந்த விபத்தில் விமானி உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு