காணொளி: டிரம்புக்கு எதிராக பெருந்திரளாக போராடிய மக்கள் - என்ன காரணம்?
காணொளி: டிரம்புக்கு எதிராக பெருந்திரளாக போராடிய மக்கள் - என்ன காரணம்?
அமெரிக்க அதிபர் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக "நோ கிங்ஸ்" என்ற பெயரில் நியூயார்க், வாஷிங்டன் டிசி உட்பட அமெரிக்காவின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டங்களில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தீவிர இடதுசாரி ஆன்டிஃபா (Antifa) இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என டிரம்பின் கூட்டாளிகள் குற்றம்சாட்டுகின்றனர். அதேபோல, இந்தப் பேரணிகள் 'அமெரிக்க வெறுப்பு பேரணிகள்' எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தப் போராட்டத்தையொட்டி பல மாகாணங்களில் தேசிய பாதுகாப்பு படை குவிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஏழு மில்லியன் மக்களை ஈர்த்த இந்த போராட்டம் அமைதியாக நடந்தது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



