டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி முகம் - கட்சித் தொண்டர்கள் கொண்டாட்டம்
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி முகம் - கட்சித் தொண்டர்கள் கொண்டாட்டம்
டெல்லியில் 70 சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 700 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், பிப்ரவரி 5 ஆம் தேதி நடந்த தேர்தலில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களித்தனர்.
இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதியான இன்று நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெற 36 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆட்சி அமைக்கத் தேவையான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதைத் தொடர்ந்து அக்கட்சி அலுவலகங்களில் பட்டாசுகளை வெடித்து வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



