திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கியவர்களை மீட்பதில் என்ன சிரமம்?
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாமலையில் பெய்த கனமழையின் காரணமாக, வ.உ.சி நகர் பகுதியில் உள்ள அண்ணாமலையார் மலையில் நேற்றிரவு (டிச. 01) மண் சரிவு மற்றும் பாறை சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், 11வது தெருவின் குடியிருப்புப் குதியில் மலையிலிருந்து உருண்டு வந்த சுமார் 40 டன் எடை கொண்ட பாறை விழுந்ததில், இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.
மண் சரிவு ஏற்பட்டு பாறை உருண்டு வீட்டின் மீது விழுந்து இடிபாடுகளில் ஒரு சிறுமி உட்பட 7 பேர் சிக்கியுள்ளனர் என, உள்ளூர் மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர். மண் சரிவு ஏற்பட்டு 20 மணிநேரத்தைக் கடந்து, இன்னும் அவர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



