டிரம்பின் வரிவிதிப்புகள் சட்டவிரோதம் - அமெரிக்க நீதிமன்றம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள பெரும்பாலான உலகளாவிய வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு பல நாடுகளுக்கு டிரம்ப் விதித்துள்ள "பரஸ்பர வரிகளையும்" சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது விதிக்கப்பட்டுள்ள இதர வரிகளையும் பாதிக்கக்கூடியது.
யூஎஸ் கோர்ட் ஆஃப் அப்பீல்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் அவசரகால பொருளாதார அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் இந்த வரிகள் அனுமதிக்கப்பட்டவை என டிரம்ப் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் அந்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றம் "இந்த வரிகள் சட்டவிரோதமானவை" எனத் தெரிவித்துள்ளது.
டிரம்ப் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக அக்டோபர் 14-ஆம் தேதி வரை இந்த தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு அமலாவதை அனுமதித்தால் அமெரிக்காவையே அழித்துவிடும் என டிரம்ப் தெரிவித்தார். "இந்த வரிகள் நீக்கப்பட்டால் நாட்டிற்கு பேரிடராக முடியும். இது நம்மை பொருளாதார ரீதியாக வலுவிழக்கச் செய்துவிடும். நாம் வலுவாக இருக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



