காணொளி: 'ஐஎஸ் இலக்குகளை குறிவைத்து தாக்குதல்' - அமெரிக்கா கூறியது என்ன?
சிரியாவில் ஐஎஸ் இலக்குகளை குறிவைத்து பெரியளவில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது. அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படைகள் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலுக்குப் பதில் தரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஐ.எஸ் போராளிகள், அவர்களின் உள்கட்டமைப்பு மற்றும் ஆயுதக் கிடங்குகளை அழிப்பதே 'ஆபரேஷன் ஹாக்-ஐ ஸ்டிரைக்'கின் நோக்கம் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறினார்.
மத்திய சிரியாவில் பல இடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டதாக, பிபிசியின் அமெரிக்க ஊடக கூட்டாளியான சிபிஎஸ் செய்தியிடம் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் ஜோர்டான் போர் விமானங்களும் பங்கேற்றதாக அமெரிக்கா கூறுகிறது. பின்னர், ஐஎஸ் அமைப்பு வலுவாக உள்ள இடங்களில் அமெரிக்கா மிகவும் வலுவான தாக்குதலை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
டிசம்பர் 13-ஆம் தேதி சிரியாவின் பல்மைரா நகரில் ஐஎஸ் தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, IS இலக்குகளை மிகக் கடுமையாக தாக்கி வருகிறோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



