காணொளி- ரஷ்யாவில் புதின் இல்லத்தை குறிவைத்து டிரோன் தாக்குதலா?

காணொளிக் குறிப்பு, காணொளி- ரஷ்யாவில் புதினின் இல்லத்தை குறிவைத்து டிரோன் தாக்குதலா?
காணொளி- ரஷ்யாவில் புதின் இல்லத்தை குறிவைத்து டிரோன் தாக்குதலா?

ரஷ்யாவில் அதிபர் புதினின் ஓர் இல்லத்தை குறிவைத்து டிரோன் தாக்குதல் முயற்சி நடந்ததாக ரஷ்யா குற்றம் சாட்டி உள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை யுக்ரேன் மறுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், இது பற்றி புதின் தனக்கு தெரிவித்ததாகவும், இது சரியான செயல் அல்ல என்றும் கூறி உள்ளார்.

யுக்ரேன் போர் தொடர்பாக டிரம்ப், ஜெலன்ஸ்கி இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடந்த நிலையில், ரஷ்யா இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது. என்ன நடந்தது?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு