அரசை விமர்சிக்கும் பள்ளி மாணவர் நாடகத்தால் சர்ச்சை - கண்ணீர்ப் புகைக் குண்டுவீச்சு
கென்யாவில் நடைபெற இருந்த தேசிய அளவிளான உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான நாடகப் போட்டி வன்முறையில் முடிவடைந்தது. கென்யாவின் புடேரேவில் அமைந்திருக்கும் பள்ளி ஒன்றின் மாணவிகள், "எக்கோஸ் ஆஃப் வார்'" என்ற நாடகம் ஒன்றை இயற்ற முடிவெடுத்திருந்தனர்.
இந்த நாடகம் சாம்ராஜ்ஜியம் ஒன்றில் இளைஞர்கள் எவ்வாறு அதிருப்தி கொண்டிருந்தனர் என்பதை காட்டும் புனைவாக உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கதையை மையமாகக் கொண்டு நிகழ்கால அரசியலைப் பேசுகின்றனர் அந்த மாணவிகள்.
கடந்த ஆண்டு வரி உயர்வுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம், காவல்துறை ஒடுக்குமுறை ஆகியவையும் இந்த நாடகத்தில் இடம் பெற்றிருந்தன. ஆரம்பத்தில் இந்த போட்டியில் பங்கேற்க இந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, நாடகம் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவை வைத்துக் கொண்டு இந்த மாணவிகள் போட்டி நடைபெறும் இடத்திற்கு சென்றனர்.
அங்கே ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில், பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது புகை குண்டை வீசியது காவல்துறை. போட்டிகள் நடைபெற இருந்த இடம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த நாடகத்தின் ஆசிரியர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விவரம், இந்த வீடியோவில்
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



