காணொளி : புதிய தொழிலாளர் சட்ட விதிகள் கூறும் மாற்றங்கள் என்ன?
காணொளி : புதிய தொழிலாளர் சட்ட விதிகள் கூறும் மாற்றங்கள் என்ன?
இந்தியாவில், பழைய தொழிலாளர் சட்டங்களுக்கு பதிலாக மத்திய அரசு நான்கு புதிய தொழிலாளர் சட்ட விதிகளை கொண்டு வந்துள்ளது.
ஓராண்டு பணி செய்தாலே கிராஜுவிட்டி பெற தகுதி, மிகுதி நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம், பெண்கள் இரவு நேரத்தில் பணியாற்ற அனுமதி போன்றவை இந்த சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலனுக்காக இந்த சட்ட விதிகள்கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. மறுபுறம் இது தொழிலாளர்களுக்கு எதிரானது என தொழிற்சங்கங்கள் விமர்சிக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



