இராக்கில் வரும் புதிய சட்டத்தால் எல்ஜிபிடி சமூகத்தினர் அச்சம் - மசோதாவில் என்ன இருக்கிறது?
தன்பாலின உறவில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில், இராக் நாடாளுமன்றம் மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது. அதன்படி, மாற்றுப் பாலினத்தவர்களுக்கும் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
கடந்த 2023-ம் ஆண்டில் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் மசூதிக்கு வெளியே ஒருவர் குர்-ஆனை எரித்ததையடுத்து, இராக் தலைநகர் பாக்தாத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில போராட்டக்காரர்கள் எல்ஜிபிடி சமூகத்தினருக்கான வானவில் வண்ண கொடியை எரித்தனர். குரானை எரித்ததற்கு பதிலடியாக எல்ஜிபிடி கொடியை எரிக்குமாறு தன்னை பின்பற்றுபவர்களுக்கு இராக் ஷியா மதகுரு மொக்டாடா அழைப்பு விடுத்தார்.
இந்தச் சட்டம் இராக்கின் மத விழுமியங்களை பாதுகாப்பதாக இச்சட்டத்தின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



