உலக தண்ணீர் தினம் : 100 கிணறுகளை வெட்டிய ஒரே மனிதர்; கிராம மக்களின் தாகம் தீர்த்த ஹீரோ
உலக தண்ணீர் தினம் : 100 கிணறுகளை வெட்டிய ஒரே மனிதர்; கிராம மக்களின் தாகம் தீர்த்த ஹீரோ
செனகலை சேர்ந்த ஜூனியர் டியாகாடே இதுவரை 100 கிணறுகளை கட்டி கொடுத்துள்ளார்.
செனகலில் உள்ள பல கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் ஒரே இளைஞர் நூறுக்கும் மேற்பட்ட கிணறுகளை கட்டிக் கொடுத்து மக்களின் தாகம் தீர்த்து வருகிறார்.
இதற்காக பலரிடமும் நிதி வசூல் செய்து , கடந்த ஆண்டில் பல கிணறுகளை உருவாக்கி கொடுத்துள்ள ஜூனியர் இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாக கூறுகிறார்.
மேலும், இதனால் தனது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்ட போதிலும் கூட தொடர்ந்து மக்களுக்காக கிணறு வெட்டிக் கொடுப்பதே தனக்கு மகிழ்ச்சி என்று அவர் தெரிவிக்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



