ககன்யான் சோதனையை வெற்றிகரமாகச் செய்த இஸ்ரோ - எப்படி சாத்தியமானது?
ககன்யான் திட்டத்திற்கான மாதிரி விண்கல சோதனை இன்று காலை 8 மணியிலிருந்து மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட பின், மற்றொரு நாளில் சோதனை நடைபெறும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருந்த நிலையில், சோதனைக்கலனில் ஏற்பட்ட கோளாரைக் கண்டுபிடித்து, சீரமைத்து, மீண்டும் 10 மணிக்கு சோதனைக்கலன் விண்ணில் ஏவப்பட்டது.
மாதிரி விண்கலம் டிவி-டி1(TV-D1) ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. மாதிரி சோதனை வெற்றிகரமாக முடிந்தவுடன் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், "இந்த டிவி-டி1 மிஷன் வெற்றிகரமாக முடிந்துள்ளது.
இதன் நோக்கம், ககன்யாம் திட்டத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்கள், அதிலிருந்து தப்பிக்கும் ஒரு வாகனப் பரிசோதனை இது. இது வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து, வீரர்களைக் கொண்டு செல்லும் வாகனம் வெற்றிகரமாக சோதனைக்கலனில் இருந்து பிரிந்து, குறித்த வேகத்தில் கடலில் விழுந்துள்ளது.
அது தொடர்பான அனைத்து தரவுகளும் அந்த இயந்திரத்தில் உள்ளது. கடலில் விழுந்துள்ள இயந்திரம் மீட்கப்பட்டு, கப்பல் மூலமாகக் கொண்டுவரப்படும்," என்றார்.
மேலும், கடைசி ஐந்த நொடியில் சோதனை திட்டம் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தையும் அவர் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



