குஜராத்தில் பார்வை குறைபாடு உடையவர்களின் ஃபேஷன் ஷோ
குஜராத்தில் பார்வை குறைபாடு உடையவர்களின் ஃபேஷன் ஷோ
குஜராத்தின் ராஜ்கோட்டில் நடந்த ஒரு சிறப்பு ஃபேஷன் ஷோ காட்சியில் ராஜ்கோட் பார்வையற்ற பெண்கள் சங்கத்தைச் சேர்ந்த எட்டு பெண்கள் பங்கேற்றனர். இதற்காக அந்தப் பெண்களுக்கு 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியின் போது, ரேம்ப்பில் எப்படி நடப்பது, எப்படி சிரிப்பது மற்றும் பார்வையாளர்கள் மற்றும் விருந்தினர்கள் முன் கைகளை எப்படி அசைப்பது என்பதை அவர்கள் கற்றுக்கொண்டனர். பேஷன் ஷோவுக்கு ஒரு நாள் முன்னதாக, இவர்களுக்காக இறுதி ஒத்திகையும் ஏற்பாடு செய்யப்பட்டது.
பார்வை குறைபாடு உடையவர்களின் இந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி பார்வையாளர்களின் மனங்களை வெகுவாகக் கவர்ந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



