ஷமிக்கு குவியும் பாராட்டுகள்: பிரதமர் முதல் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வரை கூறியது என்ன?
இந்திய பந்துவீச்சாளார் முகமது ஷமியின் அபாரமான பந்துவீச்சை அனைவரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில், ஷமியின் பந்துவீச்சே இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற உதவியாக இருந்தது. இந்த போட்டியில் அவரது பந்துவீச்சை பாராட்டி, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷோயப் அக்தர், வாசிம் அக்ரம் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஷமியின் பந்துவீச்சை அடுத்த தலைமுறை கிரிக்கெட் ரசிகர்களும் நினைவில் கொள்வர் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி X தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். ஷமி தனது பந்துவீச்சால் மாயாஜலங்கள் செய்கிறார் என ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



