'என் மகளை மீட்டு தாருங்கள்'- ஹமாஸ் கடத்தி சென்ற பெண்ணின் தாய் கதறல்
இஸ்ரேல் மீது அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்திய போது இஸ்ரேலிலிருந்து சுமார் இருநூறு பேரை கடத்தி சென்றது. அதில் ஒரு பெண்ணின் வீடியோவை ஹமாஸ் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் பெண்ணின் வலது கையில் காயம் ஏற்பட்டு, அதற்கான சிகிச்சை வழங்குவது தெரிகிறது. இந்த வீடியோவை பார்த்த அந்த பெண்ணின் தாய், தனது மகளை திருப்பி தர செய்தியாளர்கள் முன்னிலையில் இஸ்ரேலில் கோரிக்கை விடுத்தார்.
கடத்தி சென்ற தனது மகளையும் பிற 198 பேரையும் விடுவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். "என் மகள் உயிருடன் இருக்கிறாள் என்பதை பார்த்தேன். அவள் மிகுந்த வலியில் இருக்கிறாள். அவர்கள் சொல்ல சொன்னதை அவள் சொல்லியிருக்கிறாள் என்பதை தெரிந்துக் கொள்ள முடிந்தது. அவளுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. அவள் திரும்பி வரும் நாளில் அவளை கட்டி அணைக்க போகும் தருணத்தையே நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



