நவீன இசையில் சங்கத் தமிழை வளர்க்கும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் தமிழோசை என்ற தனது குழுவின் மூலம் சங்கத் தமிழை இன்றைய தலைமுறைகளிடம் கொண்டு செல்லும் முன்னெடுப்பை தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.
புதிய இசை மூலம் இளைஞர்கள் ரசிக்கும் வகையில் சங்க இலக்கியங்களை அவர்களிடம் கொண்டு செல்வதாக ஜேம்ஸ் வசந்த் பிபிசியிடம் தெரிவித்தார்.
“புத்தகக் கண்காட்சி, கல்லூரி ஆண்டுவிழாக்கள், கலாச்சாரம் விழாக்கள், மொழி மற்றும் இலக்கியம் சார்ந்த விழாக்கள் இந்த நிகழ்ச்சிகளை நாங்கள் நடத்தி வருகிறோம். இளைய தலைமுறையினரிடம் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது” என்று அவர் கூறுகிறார்.
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் குழுக்களை அமைத்து அவர்களுக்கும் இது தொடர்பான பயிற்சிகளையும் வழங்கி வருவதாகவும் அவர்கள் அந்தந்த பகுதிகளில் மக்களிடம் சென்று பாடுகின்றனர் என்றும் ஜேம்ஸ் வசந்த் கூறுகிறார் (முழு தகவல் காணொளியில்)
காணொளி தயாரிப்பு - ஜெரின் சாமுவேல்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



