'எங்க அப்பாவுக்கு நான் இல்லனா யார் உதவி பண்ணுவா'- டிராக்டர் உடன் களத்தில் இறங்கிய பெண்

காணொளிக் குறிப்பு, எங்க அப்பாவுக்கு நான் இல்லனா யார் உதவி பண்ணுவா' டிராக்டர் உடன் களத்தில் இறங்கிய பெண்
'எங்க அப்பாவுக்கு நான் இல்லனா யார் உதவி பண்ணுவா'- டிராக்டர் உடன் களத்தில் இறங்கிய பெண்

குஜராத்தின் ஆரவள்ளி மாவட்டத்தில் உள்ள காதா கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் தன்வி பட்டேல், தன் வீட்டின் முழுப் பொறுப்பையும் தனது தோள்களில் சுமக்கிறார்.

எல்லாவற்றையும் மிகச்சீராக நிர்வகித்து வரும் இவரது திறமையை, கிராம மக்களும் கூட பாராட்டுகிறார்கள். விதைப்பு காலம் நடந்து வருவதால், தன்வி தன் வயலில் அனைத்து பணிகளையும் செய்து வருகிறார்.

வெயில், மழையைப் பொருட்படுத்தாமல் டிராக்டர் மூலம் நிலத்தை உழுகிறார். தன்வி தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம், ஆண்களை விட பெண்கள் எவ்விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்ற வலுவான செய்தியை சமூகத்திற்கு உணர்த்துகிறார். (முழு தகவல் காணொளியில்)

தன்வி பட்டேல்
படக்குறிப்பு, தன்வி பட்டேல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: