வருமான வரி, வேலைவாய்ப்பு: மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்ற 10 முக்கிய அம்சங்கள்

நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், SANSAD TV

20204-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். உற்பத்தி, வேலை வாய்ப்புகள், சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட ஒன்பது விஷயங்களுக்கு முன்னுரிமைகள் அளிக்கப்பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

1. புதிய வரி விதிப்பு முறையில் சலுகை

புதிய வருமான வரி விதிப்பு முறையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு, நிலையான கழிவு ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய வரி விதிப்பு முறையின்கீழ்:

  • ரூ . 3 லட்சம் வரை - வரி இல்லை
  • ரூ. 3-7 லட்சம் வரை - 5% வரி
  • ரூ. 7-10 லட்சம் வரை - 10% வரி
  • ரூ. 10-12 லட்சம் வரை - 15% வரி
  • ரூ. 12-15 லட்சம் வரை - 20% வரி
  • ரூ. 15 லட்சத்திற்கு மேல் - 30% வரி

பழைய வரி விதிப்பு முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

வருமான வரி

2. வேலைவாய்ப்பு திட்டங்கள்

  • அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரம் ஐடிஐ-க்கள் உருவாக்கப்படும்
  • பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் மூலம் 12 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இத்திட்டத்தின்போது மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ. 5000 வழங்கப்படும்.
  • அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும்.
வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

3. விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள்

  • விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் வளர்ச்சிக்காக 1.52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  • நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் காரீஃப் பயிர்கள் குறித்து டிஜிட்டல் சர்வே நடத்தப்படும்.
  • ஐந்து மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு கிஷான் கிரெடிட் கார்ட் வழங்கப்படும்
  • இறால் இனப்பெருக்க மையங்களின் கட்டமைப்பை நிறுவ நிதி உதவி வழங்கப்படும்
  • அதிக மகசூல் மற்றும் காலநிலை மாற்றத்தை தாங்கும் வகையில் 32 விவசாய பயிர்களில் 109 ரகங்கள் வெளியிடப்படும். இதன் மூலம் விவசாயம் மற்றும் தோட்டக்கலைத் துறை மேம்படும்.
  • இயற்கை விவசாயம் குறித்து நாடு முழுவதும் 1 கோடி விவசாயிகளுக்கு சான்றிதழ் பயிற்சி வழங்கப்படும்.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட்

4. காலநிலை மாற்றம் தொடர்பாக கொள்கை

  • காலநிலை மாற்றம் மற்றும் தணிப்பு(Climate change and mitigation) திட்டங்களுக்கு சிறப்பு கொள்கை உருவாக்கப்படும்

5. விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதி

  • விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • இந்த நிதி அரசால் அங்கீகரிக்கப்பட்ட 180 விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும்
நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Images

6. பிரதமர் ஆவாஸ் யோஜனா 2.0

  • பிரதமர் ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்.

7. சென்னை - விசாகப்பட்டினம் இடையே அதிவிரைவுச் சாலை

  • சென்னை - விசாகப்பட்டினம் இடையே அதிவிரைவு சாலை கொண்டு வரப்படும்
நிர்மலா சீதாராமன்

8. பிகார் மாநிலத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள்

  • பிகார் மாநில வளர்ச்சிக்காக 26 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  • ஏற்கெனவே உருவாக்கப்படும் இரண்டு விரைவு வழிச்சாலை இல்லாமல், மேலும் 3 விரைவு வழிச்சாலை பிகார் வழியாக அமைக்கப்படும்.
  • பக்சர் மாவட்டத்தில் உள்ள கங்கா ஆற்றின் மேல், புதிய பாலம் அமைக்கப்படும். இது இருவழிச்சாலையாக அமைக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் அறிவிப்பு.
  • நாளந்தா சுற்றுலா மையத்தை மேம்படுத்த நிதியுதவி அளிக்கப்படும்.
  • விஷ்ணுபாத் கோவில் மற்றும் கயாவிலுள்ள மகாபோதி கோவிலும், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு இணையாக மேம்படுத்தப்படும். இத்துடன் ராஜ்கீரிலுள்ள சமண கோவிலும் மேம்படுத்தப்படும்.
  • பிகாரில் வெள்ளத்தால் ஏற்படும் சேதம், பயிர் பாதிப்புகளை களைய உரிய திட்டங்கள் கொண்டு வரப்படும். குறிப்பாக கோசி ஆற்றில் ஏற்படும் வெள்ளத்தால் விவசாயம் பாதிக்கப்படுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

9. சிறுகுறு நிறுவன வளர்ச்சிக்கு ரூ.100 கோடி

  • சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மத்திய பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  • முத்ரா கடன் திட்டத்தின் மூலம் வழங்கும் கடன் தொகையின் உச்சவரம்பு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

10. ஆந்திராவுக்கான திட்டங்கள்

  • ஆந்திரா வளர்ச்சிக்கு ரூ.15,000 கோடி நிதி உதவி.
  • ஆந்திராவில் நதிநீர், சாலை மேம்பாடு என பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்
  • ஹைதராபாத் - பெங்களூரு பாதுகாப்பு தளவாட தொழில் வழித்தடம் திட்டம் அமைக்கப்படும்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)