இரண்டாம் உலகப்போர் நினைவுகளை புகைப்படம் எடுத்த 99 வயது முதியவர்
இரண்டாம் உலகப்போர் நினைவுகளை புகைப்படம் எடுத்த 99 வயது முதியவர்
ரோபார் மாவட்டத்தில் உள்ள டெக்வால் கிராமத்தில் வசிக்கும் சரண் சிங், சிங்கப்பூரில் 1945 முதல் 1947 வரை ராயல் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் சிப்பாயாகப் பணிபுரிந்தார்.
இதற்கிடையில், வாய்ப்புக் கிடைத்த நேரத்தில், கேமராவில் படம்பிடித்தார். சரண் சிங் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஒரு கதை உள்ளது, அதை அவர் இன்றும் சிறப்பாக விவரிக்கிறார்.
99 வயதான சரண் சிங் 1924இல் பிறந்தார். ராணுவத்தில் வீரர்களுக்கு ரேஷன் வழங்குவதே அவரது வேலை. சரண் சிங் சிங்கப்பூரில் புகைப்படம் எடுத்த கேமரா இப்போது அவரிடம் இல்லை, ஆனால், அதற்கு ஒரு கதை இருக்கிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



