பாலமேடு ஜல்லிக்கட்டு: முதலிடம் பிடித்த பிரபாகரன் வைக்கும் கோரிக்கை
மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலேயே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
இதில் அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், மாட்டுப் பொங்கல் தினமான செவ்வாய்க் கிழமையன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
பாலமேடு மஞ்சமலை ஆற்றுத்திடலில் உள்ள வாடிவாசலில் மாவட்ட நிர்வாகமும் பாலமேடு கிராம பொது மகாலிங்க மடத்துக் குழுவும் இணைந்து இந்தப் போட்டியை நடத்தின.
இந்தப் போட்டியில் மதுரை மாவட்டத்தில் மட்டுமல்லாமல், மதுரையைச் சுற்றியுள்ள தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த காளைகளும் தஞ்சாவூர், புதுக்கோட்டையைச் சேர்ந்த காளைகளும் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியில் 14 காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. மொத்தமாக 49 பேர் காயமடைந்தனர். முதல் பரிசு பெற்ற பிரபாகரன் ஆன்லைன் முறையில் பதிவு செய்யும் முறையை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)









