40 இந்தியர்களின் உயிரைக் குடித்த குவைத் தீவிபத்து, தமிழர்களின் நிலை என்ன? - காணொளி

காணொளிக் குறிப்பு, 40 இந்தியர்களின் உயிரைக் குடித்த குவைத் தீவிபத்து, தமிழர்களின் நிலை என்ன? - காணொளி
40 இந்தியர்களின் உயிரைக் குடித்த குவைத் தீவிபத்து, தமிழர்களின் நிலை என்ன? - காணொளி

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று ஜூன் 12ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் குறைந்தது 40 பேர் இந்தியர்கள் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். குவைத்தின் தென் பகுதியில் உள்ள அகுமதி ஆளுநரகத்தில் மங்காஃப் நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஜூன் 12ஆம் தேதி பெரியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 6 மணிக்கு தீ விபத்து தொடர்பாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக உள்துறை அமைச்சகத்தின் குற்றவியல் சான்றுகளுக்கான பொதுத் துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் ஈத் அல்-ஓவைஹான் கூறியுள்ளார். குடியிருப்பின் கீழ் தளத்தில் தீ பிடித்து புகை பரவியதால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு திணறலுக்கு உள்ளானதாக தீயணைப்புத்துறையைச் சேர்ந்த ஒருவரை மேற்கோள் காட்டி ஏ.எஃப்.பி.

செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. இது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் அங்கு நடந்ததை விவரிக்கும் காணொளி.

குவைத் தீவிபத்து

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)