இந்தியா டி20 உலகக்கோப்பை வென்ற மகிழ்ச்சித் தருணம் - புகைப்படத் தொகுப்பு

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது இந்தியா. பிரிட்ஜ்டவுனில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில், 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது இந்தியா.

20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது இந்திய அணி. 177 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்த இறுதி ஆட்டத்தின் சில சிறப்பு புகைப்படங்களை இங்கு காணலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விராட் கோலி 48 பந்துகளில் இந்த உலகக் கோப்பையில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இந்த உலகக் கோப்பை முழுவதும் ஃபார்மின்றி தவித்து வந்த கோலி முதல் அரைசதத்தை 48 பந்துகளில் பதிவு செய்தார், இதில் 4 பவுண்டரிகள் அடங்கும். கோலி அரைசதம் அடித்தது சிறப்பானது, அதுவும் தேவையான நேரத்தில் அடிக்கப்பட்டது.

போட்டிக்குப் பிறகு பேசிய விராட் கோலி இது தான் என்னுடைய கடைசி டி20 உலகக் கோப்பை என்று கூறினார்.

ஆட்டநாயகன் விருது வென்ற கோலி கூறுகையில் “இதுதான் என்னுடைய கடைசி சர்வதேச டி20 போட்டி. இதைத்தான் சாதிக்க விரும்பி்னோம். குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஓட முடியாது என்பது ஒருநாள் நமக்குத் தெரியும். அது நடந்துவிட்டது. அடுத்த தலைமுறை அணியை வழிநடத்தும் நேரம் வந்துவிட்டது. சில வியத்தகு வீரர்கள் வந்து அணியை வழிநடத்தி தேசியக் கொடியை உயரே பறக்கவிடுவார்கள்” எனத் தெரிவித்தார்.

1991-ஆம் ஆண்டு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் வந்தது முதல் ஏறக்குறைய 33 ஆண்டுகளாக ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர், டி20 தொடரில் இதுவரை தென் ஆப்ரிக்கா அரையிறுதியைக் கடந்தது இல்லை.

ஐசிசி நடத்தும் போட்டிகளில் 1998 சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதற்குப் பின் இதுவரை வேறு எந்தக் கோப்பையையும் வென்றது இல்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)