தென் மாநிலங்களில் பிரதமர் மோதி பயணம் ஏன்? பா.ஜ.க. வியூகம் என்ன?

காணொளிக் குறிப்பு, ஜனவரி 22ஆம் தேதி(நாளை) அன்று அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
தென் மாநிலங்களில் பிரதமர் மோதி பயணம் ஏன்? பா.ஜ.க. வியூகம் என்ன?

ஜனவரி 22ஆம் தேதி(நாளை) அன்று அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் 24 மணிநேரமும் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.

இதனை ஒட்டுமொத்த நாடுமே உற்று கவனித்து வரும் வேளையில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி தென் மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது விவாதங்களை கிளப்பியுள்ளது. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா என தென் மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்குச் செல்வது கூட்டங்களில் பங்கேற்பது என கடந்த சில வாரங்களாக பிரதமர் நரேந்திர மோதி மேற்கொண்டுள்ள பயணம் அரசியல் ரீதியாகவும் கவனிக்கப்படுகிறது.

ராமர் கோவில் குடமுழுக்கு நடைபெறுவதற்கு 11 நாட்களுக்கு முன்பு நரேந்திர மோதி உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கியதில் இருந்து அவரது நடவடிக்கைகளை எதிர்கட்சியினரும் அரசியல் நிபுணர்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கோணங்களில் இதுகுறித்து விவாதம் எழுந்துள்ளது.

2024 மக்களவை தேர்தலுக்கான பரப்புரையை பிரதமர் மோதி ஏற்கெனவே தொடங்கிவிட்டார். தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு ஆகியவற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.

தென் மாநிலங்களில் ராமர் தொடர்பான கோவில்களுக்குச் செல்வதும் மற்றும் அரசியல் தொடர்பான கூட்டங்களில் பிரதமர் கலந்து கொள்ளும் விதமும் தனது, ஆட்சிக்கு எதிரான மனநிலையை களைவதற்காக மேற்கொள்ளும் முயற்சி என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)